டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஜன.14: திருச்சி மாவட்ட காவல்துறை டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருச்சி மாவட்ட காவல்துறை டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்களிடமிருந்து, திருவெறும்பூர், லால்குடி, கொள்ளிடம், சமயபுரம், முசிறி, துறையூர், மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலான நேரங்களில் போக்குவரத்துக் காவல்களுக்கு உதவியாக சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 25 முதல் 45 வரையிலும், கல்வி தகுதி ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசியல் கட்சியில் சாராதவராகவும், எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் காவல் துறைக்கண்காணிப்பாளர், மாவட்ட ஆயுதப்படை, சுப்பிமணியபுரம், திருச்சி, அலுவலகத்தில் ஜனவரி 31ம்தேதிக்குள் நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Volunteers ,Tropic Warden ,
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன்...