×

மணப்பாறை அருகே குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

மணப்பாறை, ஜன.14: மணப்பாறை அருகே கிராம மக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அதிகளவில் குரங்குகள் திரிகின்றன. இவைகள், தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள், சிறுவர்களை கடிக்க, பாய்ந்து துரத்துகின்றன. இதனால் தெருக்களில் நடந்து செல்ல மக்கள் அச்சமடைகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளே புகுந்து உணவுப் பொருட்களை சேதப்படுத்துகின்றன. எனவே, இப்பகுதியில் திரியும் குரங்குகளைப் பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டுமென மக்கள் மணப்பாறை வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவு, மற்றும் மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் பிரிவில் புகார் செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குரங்குகள் தொல்லையை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கொட்டப்பட்டி வெங்கடேசன் மாவட்ட வனஅதிகாரி சுஜாதாவிடம் நடவடிக்கை எடுக்ககோரி முறையிட்டுள்ளார்.

Tags : monkeys infestation ,Manapparai ,
× RELATED மணப்பாறை அருகே கிராவல் மண்...