×

அந்தோணியார் பொங்கலையொட்டி திருக்கானூர்பட்டியில் பிப்ரவரி 9ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்

தஞ்சை, ஜன. 14: அந்தோணியார் பொங்கலையொட்டி திருக்கானூர்பட்டியில் பிப்ரவரி 9ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ (பொ) கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். திருக்கானூர்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், திருக்கானூர்பட்டி கிராமத்தில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு தொன்றுதொட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதுபோன்று இந்தாண்டு பிப்ரவரி 9ம் தேதியில் அரசு விதிகளுக்கு உட்பட்டு எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கீதாஞ்சலி அளித்த மனுவில், பட்டுக்கோட்டை ஒன்றியம் பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் 2,000 குடியிருப்புகளும், 5,500 மக்கள் தொகையும் உள்ளது. ஊராட்சிக்கு பல்வேறு வரியினங்கள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.17 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. பொன்னவராயன்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.  இதனால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மழை காலங்களில் அலுவலகம் செயல்பட முடியாத நிலையை அடைந்துள்ளது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகம் நூலக கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வந்தது. இதையடுத்து தொடர்ந்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 2018ம் ஆண்டு நூலக கட்டிடம் அருகில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. அதன்பிறகு கஜா புயல் வீசிய நிலையில் பழைய கட்டிடம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் கிராம ஊராட்சி சேவை மையத்துக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. எனவே பூமிபூஜை போடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிட கட்டுமானத்தை உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் மனு
பட்டுக்கோட்டை ஒன்றியம் பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் 2,000 குடியிருப்புகளும், 5,500 மக்கள் தொகையும் உள்ளது. ஊராட்சிக்கு பல்வேறு வரியினங்கள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.17 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது.

Tags : Antonyar Pongaliyoti ,Jallikattu ,Tirukkanurpatti ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை