×

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் சேதுபாவாசத்திரம் கடற்கரை தெருவில் குவிந்து கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கும்பமுனி சித்தருக்கு சிறப்பு யாகம்

கும்பகோணம், ஜன. 14: கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் மேற்கு பிரகாரத்தில் உள்ள கும்பமுனி சித்தரின் ஜென்ம தின குருபூஜை விழா நேற்று நடந்தது. இதைதொடர்ந்து கும்பமுனி சித்தருக்கு மஹாயாகம் நடந்தது. கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் 18 சித்தர்களின் முதன்மையானவரும், அகஸ்தியர் என்று அழைக்கப்படுபவருமான கும்பமுனி சித்தர் கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலின் மேற்கு பிரகாரத்தில் அருள் வழங்கி வருகிறார். கும்பமுனி சித்தரை வணங்குவதாலும், அவருக்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்வதாலும் மன அமைதியும், ஆன்மிக ஞானம் கிடைக்கும். மேலும் மனசஞ்சலம், விரோத எண்ணங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கும்பமுனி சித்தரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் நேற்று என்பதால் அவரது பீடத்தில் கடந்த 12ம் தேதி காலை 8 மணிக்கு விநாயகர், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகையம்மன், கார்த்திகேயர், குமரப்பர், ஆதிலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு காவிரியாற்றின் திருமஞ்சன படித்துறையில் இருந்து யானை வாகனத்தில் புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வந்து கும்பமுனி சித்தருக்கு மகாயாகம், விஷேச அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் கும்பமுனி சித்தர் எனும் அகத்தியர் திருவீதியுலா நடந்தது.

Tags : activists ,Kumbamuni Siddhartha ,Adikumbeswarar Temple ,beach street ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...