×

மாவோயிஸ்டுகளை விட பாஜ ரொம்ப மோசம்: மம்தா அதிரடி

புருலியா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி,  9 எம்எல்ஏ.க்கள், ஒரு எம்பி.யை தொடர்ந்து, மேலும் சில திரிணாமுல் தலைவர்கள் பாஜ.வில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில், புருலியா மாவட்டத்தில் ேநற்று உரையாற்றி முதல்வர் மம்தா, “அரசியல் புனிதமான சித்தாந்தம்.  தினமும் ஆடையை மாற்றுவது போல கொள்கையை மாற்றக் கூடாது. மக்களுக்கு பொய் வாக்குறுதியை தரும் பாஜ.வினர் மாவோயிஸ்டுகளை விட மோசமானவர்கள். பாஜ.வில் சேர விரும்புபவர்கள் சேரலாம். ஆனால். நான்  ஒருபோதும் பாஜ.விற்கு தலை வணங்க மாட்டோம்,”என்றார்….

The post மாவோயிஸ்டுகளை விட பாஜ ரொம்ப மோசம்: மம்தா அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Maoists ,Mamata ,Purulia ,West Bengal ,Trinamool Congress ,Chief Minister ,Mamata Banerjee ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலுக்கு பின்னர்...