×

சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலி்ல் திமுகவை சேர்ந்த முத்து மாணிக்கம், செல்லம் சவுந்தர்ராஜன் வெற்றி

சேதுபாவாசத்திரம், ஜன. 14: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த முத்து மாணிக்கம், செல்லம் சவுந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்ற அறையில் ஒன்றியக்தலைவருக்கான தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. 9 திமுக ஒன்றியக் குழு உறுப்பினர்களும், ஒரு சுயேட்சை ஒன்றிய குழு உறுப்பினரின் ஆதரவோடு 10 ஒன்றிய குழு உறுப்பினர்களும், அ.தி.மு.க 6 ஒன்றிய குழு உறுப்பினர்களை பெற்றிருந்த போதிலும் தேர்தல் போட்டியில் நடைபெற்றது. தேர்தல் அலுவலர் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் முருகேசன் தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கை.கோவிந்தராசன் முன்னிலையிலும் நடைபெற்றது. திமுக சார்பில் மு.கி முத்துமாணிக்கம் அதிமுக சார்பில் சிவ.மதிவாணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 10 வாக்குகள் பெற்று மு.கி.முத்துமாணிக்கம் வெற்றி பெற்றார். மாலையில் நடந்த தேர்தலில் 10வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி ஒன்றியக்குழு துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வானார்.

திருவோணம்: திருவோணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. 15 ஒன்றிய குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வேட்பாளராக செல்லம் சவுந்தர்ரராஜன் மற்றும் அதிமுக சார்பாக பாதம்பிரியாள் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் அதிகாரி முருகன் தலைமையில் நடந்த தேர்தலில் ஒன்பது வாக்குகளைப்பெற்று திமுக வேட்பாளர் செல்லம் சவுந்தர்ரராஜன் வெற்றி பெற்றார். அவருக்கு திருவோணம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட திமுகவினர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.

Tags : election ,Thiruvonam Union Committee Chairman ,DMK ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...