முதியவரை தாக்கியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 14: பூதலூர் அருகே இடப்பிரச்னையால் முதியவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். பூதலூர் அடுத்த முத்தாண்டிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அற்புத சகாயராஜ் (55). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சார்லசுக்கும்(41) இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி மாலை அற்புத சகாயராஜ் அதே ஊர் அந்தோணிசாமியின் டீக்கடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சார்லஸ், அவரிடம் தகாராறு செய்ததில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் சார்லஸ் தாக்கியதில் அற்புத சகாயராஜ் கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தில் அற்புதசகாயராஜ் நேற்று புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிந்து சார்லஸை கைது செய்து விசாரணை நடத்தினார்.

Tags :
× RELATED சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக...