×

ஏஆர்ஆர் அறக்கட்டளை சார்பில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்

கும்பகோணம், ஜன. 14: கல்வி காவலர் அமரர் ஏஆர்ஆர் அவர்களின் பெயரால் அறக்கட்டளை ஒன்றை துவங்கி அவர் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஏஆர்ஆர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுப்ரமணியம் மற்றும் ஏஆர்ஆர் கல்வி குழுமங்களின் முன்னாள் செயலாளர் லைலாசுப்ரமணியம் நினைவாக ஏஆர்ஆர் அறக்கட்டளை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து மாபெரும் சிறப்பு இருதய பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடத்தியது. பள்ளிகளின் தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் வைத்தியநாதன், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் சுகமாலா வைத்தியநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முன்னாள் அனுபவமிக்க தமிழாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் உரையாற்றினார். பின்னர் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச இருதய பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.
குடந்தை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 467 பொதுமக்கள் பரிசோதனைக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் இலவச இசிஜி மற்றும் 200 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ரத்த பரிசோதனை, ரத்தகொதிப்பு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 150 பேர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மேல் மருத்துவத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டது. தாளாளர் சுப்ரமணியம் வழிகாட்டுதன்படி முகாம் ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர், கல்வி ஆலோசகர், தலைமை ஆசிரியை செய்திருந்தனர். முகாமில் ஏஆர்ஆர் கல்வி குழுமங்களின் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஜேஆர்சி, நாட்டு நலப்பணிதிட்டம் மற்றும் சாரணர் இயக்க மாணவர்கள் தொண்டாற்றினர்.

Tags : Free Cardiovascular Testing Camp ,ARR Foundation ,
× RELATED கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள்...