×

பைக் பறிமுதல் புதுகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்: 189 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை, ஜன.14:புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 189 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் கறம்பக்குடி தாலுகா, நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிரசன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்ததை தொடர்ந்து அவரது மனைவி மகேஸ்வரிக்கு முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலையை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். விற்பனை மந்தம்
பொன்னமராவதியில் பொங்கலுக்காக கரும்பு, பானை, மஞ்சல், கலர் கோலப்பொடி போன்றவை வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால்; பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இன்று செவ்வாய் கிழமை பொங்கல் சந்தை என்பதால் நேற்று பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. மேலும் வௌ்ளம்,சர்க்கரை பொங்கலுக்கு தேவையான சாமான்கள், மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

Tags : Pilgrimage ,Collector ,petitions ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு