அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கல்

திருமயம், ஜன.14: திருமயத்தில் கூட்டுறவு சங்க தலைவர் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், மேலூர், புலிவலம், அரசம்பட்டி ஊராட்சி மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவை திருமயம் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன், திமுக மாநில பொதுகுழு உறப்பினர் புலிவலம் சுபப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>