×

போகி பண்டிகையன்று சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் பிரசாரம்

இலுப்பூர், ஜன.14: இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் போகிப்பண்டிகையின் போது எரிக்கப்படும் பொருட்களால் சுற்றுச் சூழல் மாசுபடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். போகிப்பண்டியையின் போது தேவையற்ற பொருட்களாக பிளாஸ்டிக் பொருள்கள், டயர் போன்ற பொருள்கள் எரிக்கப்படும் போது சுற்றுப்புற சூழ்நிலைகள் மாசுபடுகிறது. இதனால் ஏற்படும் தீமைகள் குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் இலுப்பூர் கடைவீதி, பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருகள் மற்றும் வீட்டியில் உள்ள துணி போன்ற பழைய பொருள்களை எரிக்கக்கூடாது என பொதுமக்களிடம் தீயணைப்பு நிலைய வீரர்கள் துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரசாரம் மேற்கொண்டனர்.

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் இன்று (14ம்தேதி) போகி பண்டிகை பொதுமக்கள் கொண்டாடவுள்ள நிலையில் நகர் முழுவதும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் மாசு ஏற்படுத்தும் பொருட்களை எரிக்கக்கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். கந்தர்வகோட்டை நகர் பகுதியில் காந்தி சிலை, பேரூந்து நிலையம், பெரியகடைவீதி உள்ளிட்ட நகர் முழுவதும் இன்று போகி பண்டிகையொட்டி பொதுமக்கள் மாசு ஏற்படும் பொருட்களை எரிக்க கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். ஏறக்கனவே பனிபொழிவினால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் போகி பண்டிகையொட்டி டயர் மற்றும் பழைய காலணிகளை எரிக்க கூடாது என தீயணைப்புத்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர். இன்று (14ம்தேதி) போகி பண்டிகை பொதுமக்கள் கொண்டாடவுள்ள நிலையில் நகர் முழுவதும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் மாசு ஏற்படுத்தும் பொருட்களை எரிக்கக்கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

கந்தர்வகோட்டை நகர் பகுதியில் காந்தி சிலை, பேரூந்து நிலையம், பெரியகடைவீதி உள்ளிட்ட நகர் முழுவதும் இன்று போகி பண்டிகையொட்டி பொதுமக்கள் மாசு ஏற்படும் பொருட்களை எரிக்க கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். ஏறக்கனவே பனிபொழிவினால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் போகி பண்டிகையொட்டி டயர் மற்றும் பழைய காலணிகளை எரிக்க கூடாது என தீயணைப்புத்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் மாசு இல்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு இயக்குனர் மற்றும் மத்திய மண்டல துணை இயக்குனர் உத்திரவிற்கு ஏற்ப தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையில் போகி பண்டிகையை பழைய கழிவுகளை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரித்து மாசு ஏற்படா வண்ணம் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது.

Tags : Firefighters campaign ,Poki Festival ,
× RELATED போகி பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை விறுவிறுப்பு