×

16, 26ம் தேதிகளில் டாஸ்மாக் விடுமுறை

புதுகை, ஜன.14: திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தினை முன்னிட்டு புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வரும் 16 மற்றும் 26 ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை விடப்படும் என்று கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தினை முன்னிட்டு வரும் 16 மற்றும் 26 ஆகிய இரண்டு தினங்களில் புதுகை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும். மேலும் மேற்கண்ட தினங்களில் மதுபானம் விற்பனையும் செய்யக்கூடாது. மீறினால் மதுபானம் விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TASMAC Vacation ,
× RELATED காந்தி பிறந்த நாளில் டாஸ்மாக் விடுமுறை