×

கலெக்டரிடம் கிராம மக்கள் மனு பார்வையிழந்த பிஎட் படித்த

ஜெயங்கொண்டம், ஜன.14: ஜெயங்கொண்டம் பகுதியில் ஊதுபத்தி விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றும் பிஎட் வரை படித்த மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் ஜெயலட்சுமி இவர்களது மகன் பரமசிவம் (40). இவர் கடந்த 1980ம் வருடம் பிறந்து பிறவியிலேயே பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளியாகவே பிறந்துள்ளார். இருந்தாலும் ரங்கநாதன் தனது மகனை மயிலாடுதுறையில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். பரமசிவத்தின் படிப்பு அறிவு மென்மேலும் வளர துவங்கியது. இதனால் மகனை மேலும் படிக்க வைக்க வேண்டும் என்று கடன் வாங்கி மகனை திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்த்தார். இருந்தாலும் பரமசிவம் அப்போது உள்ள சூழ்நிலையில் பணம் இல்லாததால் உதவிக்கு யாரும் இல்லாததாலும் தானே முன்வந்து திருச்சியில் ஊதுபத்தியை விற்பனைக்காக வாங்கி மாலை நேரங்களில் விற்பனை செய்து படித்து முன்னுக்கு வந்தார். பிரில் எழுத்து மூலம் கடைசிவரை விடாமுயற்சியுடன் படித்து விட்டு எம்ஏ, எம்பில், பிஎட் முடித்தார்.

இருந்தும் குடும்ப சூழ்நிலையில் தினசரி காலையில் வீட்டை விட்டு வெளியில் வந்து ஊதுபத்தி வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் 200 ரூபாயில் மூன்று வேளை உணவு அருந்தி மீதமுள்ளதை வீட்டுச் செலவிற்கு கொடுத்து வந்தார். தற்போது இவர் வள்ளலார் வாழ்வின் நெறிகள் என்பது பற்றி தமிழ் துறையில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2006 இல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார். படம்ஆனால் இதுவரை தனக்கு அரசு வேலை அளிக்க அரசு முன்வரவில்லை. எவ்வளவு படித்தும் தனக்கு பார்வை இழந்து ஊதுபத்தி விற்கும் எனக்கு அரசு வேலை வழங்குமா என் மீது அரசு கருணை காட்டுமா என எதிர்பார்த்து தொடர்ந்து ஊதுபத்தி விற்பனை செய்து வருகிறார்.
பார்வையில்லாமல் மற்றவர்களைப் போல யாசகம் கேட்காமல் வியாபாரம் செய்து முன்னுக்கு வர வேண்டும் என நினைக்கும் இவருக்கு உதவி செய்ய அரசு முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...