×

கிருஷ்ணராயபுரம் கம்மநல்லூர் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்

கரூர், ஜன. 14: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் தாலுகா கம்மநல்லூர் ஊராட்சி உறுப்பினர் உஷாராணி மற்றும் உறுப்பினர்கள் 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில அளித்த கோரிக்கை மனு: கம்மநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. நானும், மற்றொருவரும் போட்டியிட்டோம். மொத்தம் 10 உறுப்பினர்கள். தலா 5 ஓட்டுக்கள் பெற்ற நிலையில், மறுதேர்தல் நடத்துவது என மினிட்டில் எழுதப்பட்டது. எனினும் குலுக்கல் நடத்தியபோது நாங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தும் எதிர்தரப்பை சேர்ந்தவரை தேர்வு செய்ததாக கூறினர். மறைமுகத்தேர்தலில் விதிமீறல் நடைபெற்றதால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். எனவே இதனை மறுபரிசீலனை செய்து துணைத்தலைவருக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

7 கிழவன் மற்றும் 87 ஊர் ஆப்பாடியான் பங்காளிகள் வகையறா சார்பில் அளித்த கோரிக்கை மனு: கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வேப்பங்குடியில் அமைந்துள்ள பெரியாண்டவர் மற்றும் சந்தன கருப்பசாமி கோயிலில் தொன்றுதொட்டு ஒவ்வொரு ஆண்டும் தை முதல்நாள் திருவிழாவும்., பழபூஜையும் நடைபெறுவது வழக்கம். ஆனால் தொடர்ந்து 6 ஆண்டுகளாக பழபூஜையை நடத்தாமல் இந்து சமய அறநிலையத்துறை காலம் தாழ்த்தி வருகிறது. பூசாரியை தேர்ந்தெடுக்கும் பிரச்னையில் பழபூஜையை நடைபெறாமல் தடுத்து வருகின்றனர்.இதன் விளைவாக பழபூஜை வகையறாவில் உள்ள பூசாரிகளின் குடும்பங்களில் நிறைய அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. எனவே ஆட்சித்தலைவர் உடனடியாக தலையிட்டு வரும் தை மாதம் 1ம் தேதி (ஜனவரி 15ம் தேதி) அன்று பழபூஜை நடைபெறுவதற்கும், திருவிழாநடைபெறுவதற்கும், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Krishnarayapuram Kammannallur ,Panchayat Vice-President ,
× RELATED தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி...