×

கலெக்டர் அலுவலகத்தில் உறுப்பினர்கள் மனு மாற்று திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம்

கரூர், ஜன. 14: கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளைப் பெற்று வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தற்போது அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டைகள் 10 பக்கங்கள் கொணடதாக இருக்கும். ஆனால், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை என்பது ஸ்மார்ட் கார்டாக வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்தியாவுக்குள் மற்ற மாநிலங்களுக்கு சென்றாலும் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி அந்தந்த மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் கார்டினை ஸ்கேன் செய்தால் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெயர், முகவரி, ஆதார் எண் உட்பட முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அடையாள அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூடிஐடி) பெறாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அடையாள அட்டையை வழங்கும் வகையில், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஜனவரி 21ம்தேதி முதல் பிப்ரவரி 4ம்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதனடிப்படையில் 21ம்தேதி கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 23ம்தேதி க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 24ம்தேதி அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 28ம்தேதி குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 29ம்தேதி கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 30ம்தேதி தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 31ம்தேதி கரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ள வரும் மாற்றுத்திறனாளி நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வர வேண்டும். என கூறியுள்ளார்.

Tags : petitioners ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...