×

க.பரமத்தி ஒன்றியத்தில் தேர்வான ஊராட்சி துணை தலைவர்கள் விவரம்

க.பரமத்தி, ஜன. 14: ராஜபுரம், விசுவநாதபுரி இரு ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சி துணைதலைவர் பதவிக்கு 9ஊராட்சிகளில் போட்டி இருந்ததால் மறைமுக வாக்குபதிவு நடத்தப்பட்டது. 19 ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு நபர் மட்டுமே துணைதலைவர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மீதம் உள்ள உறுப்பினர்களில் போட்டியிட வேட்பு மனு அளிக்க யாரும் முன் வரவில்லை. இதனால் போட்டியின்றி ஊராட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்: அணைப்பாளையம் ஊராட்சிக்கு முத்துகுமாரப்பன், ஆரியூர் ஊராட்சிக்கு கிருஷ்ணமூர்த்தி, அத்திப்பாளையம் ஊராட்சிக்கு கலையரசி, சின்னதாராபுரம் ஊராட்சிக்கு லோகநாதன், எலவனூர் ஊராட்சிக்கு பரமேஸ்வரி, கூடலூர் கிழக்கு ஊராட்சிக்கு சதீஷ்குமார், கூடலூர் மேற்கு ஊராட்சிக்கு நல்லசிவம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கோடந்தூர் ஊராட்சிக்கு தங்கராஜ், மொஞ்சனூர் ஊராட்சிக்கு முத்துசாமி, நடந்தை ஊராட்சிக்கு மல்லிகா, நெடுங்கூர் ஊராட்சிக்கு ஷோபனா, க.பரமத்தி ஊராட்சிக்கு குணசேகரன், பவித்திரம் ஊராட்சிக்கு பேபி, புன்னம் ஊராட்சிக்கு மாதேஸ்வரன், சூடாமணி ஊராட்சிக்கு முருகானந்தம், தென்னிலை கிழக்கு ஊராட்சிக்கு கந்தசாமி, தொக்குப்பட்டி ஊராட்சிக்கு கமலவேணி, துக்காச்சி ஊராட்சிக்கு விஸ்வநாதன், தும்பிவாடி ஊராட்சிக்கு கருப்புசாமி ஆகிய 19 ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் துணைதலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் அஞ்சூர் ஊராட்சிக்கு சிவகுமார், கார்வழி ஊராட்சிக்கு கண்ணம்மாள், காருடையாம்பாளையம் ஊராட்சிக்கு செந்தில்குமார், முன்னூர் ஊராட்சிக்கு சுப்பிரமணி, நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு சுசீலா,புஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு துரைசாமி, தென்னிலை மேற்கு ஊராட்சிக்கு லோகநாதன், தென்னிலை தெற்கு ஊராட்சிக்கு ஜோதிமணி ஆகிய 8பேரும் போட்டியிட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். குப்பம் ஊராட்சிக்கு ஜெயசூர்யா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. ராஜபுரம், விசுவநாதபுரி இரு ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்தவுடன் நடத்தப்பட உள்ளது.

Tags : Panchayat Vice Chairpersons ,Paramount Union ,
× RELATED க.பரமத்தி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 7,131 பணிகள் நிறைவு