×

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சலீம் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் இவர்களது காதல் தொடர்ந்தது. இந்த நிலையில், கடந்த 10.9.2017 அன்று, சலீம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை கடத்தி சென்று, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு, இருவருக்கும் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து சலீம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதனிடையே, மகள் மாயமானதாக பெற்றோர், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், சிறுமி தனது காதலனை திருமணம் செய்து கொண்டு, புதுச்சேரியில் வசிப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். சலீமை கைது செய்தனர். மேலும் விசாரணையில், சலீமுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் தெரியவந்தது. இதனையடுத்து, 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த சலீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சலீம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags : jail ,Poksoo Special Court ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!