×

இயற்கை பேரிடர் மேலாண்மை தொடர்பான விளம்பர பலகை மாற்றம் தரங்கம்பாடி அரசு பள்ளியில் பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா


தரங்கம்பாடி, ஜன.14: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் செம்பனார்கோவில் மற்றும் வடகரையில் பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செம்பனார்கோவில் பகுதியில் தனியார் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா தமிழர் கலாச்சார விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் நாட்டுப்புற கலைத்துறையின் பெண் சாதனையாளர் விருது பெற்ற செல்வராணிராஜேஷ் குழுவினர் நடத்திய கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், பொய்கால்குதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டாள் தலைமை வகித்தார். பொங்கல் விழாவையொட்டி பள்ளி முழுவதும் தூய்மை செய்யப்பட்டு காகித தோரணங்கள், மாவிலை தோரணங்கள் மற்றும் வாழைமரம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. மண்பானையில் இஞ்சி, மஞ்சள் கொத்து கட்டப்பட்டு பராம்பரிய முறைப்படி விறகு அடுப்பில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் வைக்கப்பட்டன. பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும்பொழுது மாணவ மாணவிகள் பொங்கலோ பொங்கல் என்று குளவையிட்டனர். அதை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் எமிலிஜோலா, முருகன், ராதா, உமாராணி மற்றும் மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, குரவப்புலம் தனியார் உயர் நிலைப்பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பப்பிதாபானு தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி சூரியனை வழிபட்டனர். முன்னதாக பள்ளியின் வளாகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டிகள் நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் கோலம் போட்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கிரிதரன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கருணாநிதி, அழகன், கார்த்திகேயன். செல்லத்துரை, வெண்ணிலா, தவச்செல்வி, தமிழரசி, நடராஜன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா:
நாகை மாவட்டத்தில் கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது தாய், தந்தைகளை இழந்த குழந்தைகள் அன்னை சத்யா அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவு, உடை, கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமையில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டது. காப்பகத்தில் தங்கி பயிலும் மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையோடும், வைராக்கியத்துடனும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் வாழ்த்துக்கள் கூறினார். தொடர்ந்து அருகில் உள்ள அன்னை சத்யா முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியோர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார். டிஆர்ஓ இந்துமதி, மாவட்ட சமூகநல அலுவலர் உமையாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Board ,Tharangambadi Government School ,
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...