×

ஆர்.டி.ஓ மவுனம் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் வருகை குறைவால் குறைதீர் கூட்டம் பிசுபிசுத்தது


நாகை, ஜன.14: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மக்கள் வராத காரணத்தால் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வெறிச்சோடி காணப்பட்டது. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குறைகள் கேட்டறிந்து அவர்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். இதனால் நாகை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவார்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுக்கள் பெறப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் கொடுத்து சில மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாற்றித்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறை விலக்கிகொள்ளப்பட்ட நிலையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் திங்கள் கிழமைகளில் திருவிழாபோல் காணப்படும் கலெக்டர் அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. நாகை மாவட்டத்தை சுற்றி பெரும்பாலும் கிராம பகுதிகள் இருப்பதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வயல்களில் விளைவித்த கரும்பு, மஞ்சள் கொத்து, பானைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதில் முனைப்பு காட்டினர். அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். தொடர் விடுமுறையின் காரணமாக ஒருசிலர் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு பல்வேறு காரணங்களால் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியே காணப்பட்டது.

Tags : festival ,Ptongal ,RTO ,crowds ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...