×

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்

சீர்காழி, ஜன.14: சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலாகலமான சமத்துவ பொங்கல் மற்றும் காலப்போக்கில் மறைந்து போன பாரம்பரிய விளையாட்டுகளான இளவட்டகல், உறி அடித்தல், கயிறு இழுத்தல், பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுகளை இந்த இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் விதத்தில் நடைபெற்றன. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராஜ்கமல் தலைமை வகித்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து அதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குநர்கள் அமுதா நடராஜன், ஆதித்யா ராஜ்கமல் நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி முதல்வர் சுமதி நிர்வாக அதிகாரி சீனிவாசன், கல்வி ஆலோசகர் ரஜினி ரவிசங்கர், துணைமுதல்வர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.

விழாவில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் தற்காப்பு கலை சுருள் கத்தி போன்ற நிகழ்ச்சிகளை காளி சரண் மற்றும் உறுப்பினர்கள் நடத்தி காட்டினர். மேலும் நலம் பாரம்பரிய அறக்கட்டளை சுதாகர் இயற்கை விவசாயத்தின் முக்கியம் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவிகளுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும், பொது மக்களும் கலந்துக்கொண்டு பாரம்பரிய விளையாட்டுகளில் விளையாடி மகிழ்ந்தனர். பொங்கல் விழாவின் சிறப்பினை வலியுறுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

சென்னை ஜகோர்ட் தடை
இப்போட்டி சம்பந்தமாக பல்வேறு காரணங்களைக் கூறி மயிலாடுதுறை எடுத்துக்கட்டி சாத்தனுரை சேர்ந்த வழக்கறிஞர் சங்கமித்திரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரவணன்மூலம் தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை எடுத்துக்கொண்டு அரசு வழக்கறிஞரிடம் விசாரனை செய்தனர். சென்ற ஆண்டு ரேக்ளாரேஸ் நடத்த தடை செய்யப்பட்டதாகவும் அதை மீறி நடத்தப்பட்டது என்றும் அவர்கள்மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், அரசு உத்தரவை மீறி எப்படி நடத்த முடியும் என்று கேள்விகேட்ட நீதிபதிகள் நாகை மாவட்ட கலெக்டர், எஸ்பி, கால்நடை பராமரிப்புத்துறை போன்றவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வரை திருக்கடையூர் ரேக்ளா ரேசிற்கு தடைவிதித்து உத்தரவிட்டனர்.

Tags : Pongal Festival ,Sirkazhi Best Matric School ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா