×

சீர்காழியில் கல்வி மாவட்ட சாரண இயக்க ஆண்டு முகாம்

சீர்காழி, ஜன.14: சீர்காழி கல்வி மாவட்ட சாரண சங்கத்தின் சார்பில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆண்டு முகாம் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் 283 சாரணர், 117 சாரணியர்கள் பங்கேற்ற உலக சமாதான பேரணி நடைபெற்றது. இந்த ஆண்டு முகாமில் 50க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் கலந்து கொண்டன. தொடக்க நாள் இரவு நடந்த பாடித் தீ (கேம்ப் பயர்) நிகழ்ச்சியில் ஏராளமான சாரண சாரணியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன், மாவட்ட தலைவரும், தலைமை ஆசிரியருமான அறிவுடைநம்பி, சாரண ஆணையர் செந்தாமரை கண்ணன், லயன்ஸ் தலைவர் யுவராஜ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் தலைமை ஆசிரியர்கள் ராஜசேகர், கார்திகேயன் ராமலிங்கம், பொருளாளர் அசோக்குமார், சாரணிய அமைப்பு ஆணையர் காந்திமதி மற்றும் மாவட்ட செயலாளர் காசி இளங்கோவன், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல், இயக்குனர் ஆதித்தியா ராஜ்கமல் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி சர்வ சமய கூட்டு பிரார்த்தனையுடன் தொடங்கியது. தலைமை ஆசிரியர் எப்சி கலந்து கொண்டார். ஏற்பாடுகளை இளங்கோவன், உஷா ஹில்டா, ஜான் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து சாரண போட்டிகள் நடத்தப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு பாடல்கள், அணி நடைபோட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பரிசு வழங்கும் விழாவிற்கு மாவட்ட தலைவர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காசி இளங்கோவன் ஆண்டறிக்கை வாசித்தார். சாரண ஆணையர் செந்தாமரை கண்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் மாவட்ட துணை தலைவர்வர்கள் கோவி. நடராஜன், மயிலாடுதுறை கல்வி மாவட்ட செயலாளர் தேசிய நல்லாசிரியர் தியாகராஜன் , பெஸ்ட் பள்ளி முதல்வர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக இணைச்செயலாளர் செல்வராணி வரவேற்றார். மாவட்ட பொருளார் அசோக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் காசி இளங்கோவன் செய்திருந்தார்.

Tags : Education District Scout Operating Year Camp ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்