×

கொக்காலடி நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தா விட்டால் போராட்டம் திமுக அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி, ஜன. 14:கொக்கலாடி ேபருந்து நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் சாலையில் உள்ள கொக்காலடி ஊராட்சி மன்ற அலுவலகம், கொக்காலடி சிவன் கோயில், கொக்காலடி பிள்ளை கோவில் கீழகுடியிருப்பு ஆகிய மூன்று பேருந்து நிறுத்தங்களில் எந்த பேருந்துகளும் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இது குறித்து பலமுறை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. 3 பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்து நிறுத்தாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக ஒன்றியகுழு உறுப்பினர் சுரேஷ், திமுக ஊராட்சி மன்ற தலைவர் வசந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : DMK ,announcement ,bus stops ,stops ,Kokkaladi ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...