×

ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி முகாம் மன்னார்குடி வட்டாரத்தில் 100 விவசாயிகள் பங்கேற்பு

மன்னார்குடி, ஜன. 14: மன்னார்குடி வட்டார வேளாண் துணை இயக்குனர் சரஸ்வதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மன்னார்குடி வட்டாரத்தில் இருந்து பருத்திக் கோட்டை, மூவாநல்லூர், திருப்பாலக்குடி 2, துளசேந்திரபுரம், தலையாமங் கலம் உள்ளிட்ட 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணை ந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மன்னார்குடி வட்டாரத்தில் இருந்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் தென்பாதி, மூணாம்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.நீடா வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும், திட்டமிடல் குறித்தும், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் பெறப்படும் வருமானத்தை கணக்கீடு செய்வது குறித்தும் உழவியல்துறை தொழிற்நுட்ப வல்லுநர் ராஜேஷ்குமார் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.மேலும் மன்னார்குடி வட்டாரத்தில் செயல் படுத்தப்படும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும் மேற்படி திட்ட இனத்தில் விவசாயிகள் பங்களிப்பு குறித்தும் மன்னார்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி விரிவாக எடுத்துக்கூறி பேசினார். ஒருங்கிணைந்த பண்ணையம் மாதிரி திடல்கள் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டு அது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.

Tags : Integrated Farm Training Camp Mannargudi ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு