×

திருப்பத்தூரில் நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் எஸ்பி உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர், ஜன.13: திருப்பத்தூர் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை எஸ்பி உத்தரவின்பேரில் போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். திருப்பத்தூர் பகுதியியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்வீட் கடையில் வேலை செய்யும் ஒரு வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக நேற்று முன்தினம்இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து, எஸ்பி விஜயகுமாருக்கு வாட்ஸ் அப்பில் புகார் வந்தது. அதன்பேரில் எஸ்பி உத்தரவின்பேரில் திருப்பத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் திருமணம் நடக்க இருந்த இடத்திற்கு சென்று சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, போலீசார் இருவீட்டு பெற்றோர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் 3 மாதம் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் சிறுமியின் பெற்றோருக்கு இந்த சிறிய வயதில் திருமணம் செய்யக்கூடாது. குழந்தை திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று குழந்தை திருமண விழிப்புணர்வு குறித்து போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்பு திருமணம் செய்து வைப்போம் என போலீசாரிடம் எழுதி பெற்றனர். இதுகுறித்து எஸ்பி விஜயகுமார் கூறுகையில்,` சட்டத்திற்கு புறம்பாக சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் அவர்களது பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இவ்வாறு குழந்தை திருமணங்கள் செய்வது தெரிய வந்தால் பொது மக்கள் உடனடியாக 9442992526 என்ற எனது `வாட்ஸ்-அப்'''' எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். என்றார்.

Tags : SP ,Tirupathur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்