×

களியக்காவிளை எஸ்எஸ்ஐ சுட்டுக்கொலை நெல்லை வனப்பகுதியில் திட்டம் தீட்டினரா?'

வி.கே.புரம், ஜன.13: குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சனை கடந்த 8ம்தேதி காரில் வந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நடந்த பகுதியிலுள்ள பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த அக்பர்அலி (33). எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் செல்போனின் பேசியதாக தெரிகிறது. விகேபுரம் சந்தனமாரியம்மன் கோயில் ஸ்டாண்டில் ஆட்ேடா ஓட்டி வரும் இவரை நேற்று அதிகாலை குமரி மாவட்ட போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொல்வதற்கான திட்டம் கடந்த சில மாதங்களாக சேர்வலாறு மலைப் பகுதியில் தீட்டப்பட்டதாகவும், கோவை பாலக்காடு, செங்கோட்டை புளியரை அல்லது நாகர்கோவில் களியக்காவிளை ஆகிய 3 சோதனை சாவடியில் ஏதாவது ஒன்றில் தாக்குதல் நடத்துவது என்று தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்துள்ளது. வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : killings ,SSI ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...