×

கிடப்பில் போடப்பட்ட மாஞ்சோலை மலைச்சாலையை தற்காலிகமாக சீரமைத்த வனத்துறை

அம்பை,ஜன.13: தினகரன் செய்தி எதிரொலியாக கிடப்பில் போடப்பட்ட மாஞ்சோலை சாலையை வனத்துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர்.  நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பக பகுதியில் மணிமுத்தாறு செக்போஸ்ட் முதல் மாஞ்சோலை வரையிலான சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்திவெளியானது. தோட்டத்தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
ஜான்சன் அப்பாத்துரை என்பவர் மனித உரிமை ஆணையத்திடம் அளித்த புகாரையடுத்து மலைச்சாலையில் அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1.8 கோடியில் சாலை அமைக்கும் ஆரம்ப கட்ட பணி திருச்சி வனத்துறை பொறியியல் கோட்டம் சார்பில் ஏப்.26ம்தேதி தொடங்கியது.

பல்வேறு காரணங்களால் 8 மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து நெல்லையில் கடந்த டிச.23ம்தேதி மனித உரிமை ஆணைய நீதிபதி முன் ஆஜரான வனத்துறையினர் ஜனவரியில் சாலை அமைப்பதாக உறுதியளித்தனர். இதைதொடர்ந்து ஆய்வு செய்த நீதிபதி மழையை பொருத்து விரைவில் பணி தொடங்கி 10 நாட்களில் பணி முடிவடையும் என்றார். காணும் ெபாங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் வரும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுவார்கள் என்பதால் மணிமுத்தாறு அருவி சாலையை வனத்துறையினர் தற்காலிகமாக சீரமைக்கும் பணியை நேற்று ெதாடங்கினர். மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தற்காலிக குடில்களும் அமைத்து வருகின்றனர். சாலையோரப் பகுதி எளிதில் தெரியும் பொருட்டு நிறுத்தப்பட்டுள்ள கற்களில் வெள்ளை வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

Tags : Forest Department ,Manjolai ,hill station ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...