×

பைக் மீது கார் மோதிய சம்பவம் வாலிபர்களை தாக்கியதால் உறவினர்கள் சாலை மறியல்

கெங்கவல்லி, ஜன.13:கெங்கவல்லியில் பைக் மீது கார் மோதிய சம்பவத்தில், வாலிபர்களை தாக்கியதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்கவல்லியை சேர்ந்த திமுக பிரமுகர் சிட்டிபாபு, ஆணையாம்பட்டி பகுதியை சேர்ந்த துரை என்பவரும்,  நேற்று டூவீலரில் கெங்கவல்லி கடைவீதி அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது,  காரில் பின்னால் வந்த கெங்கவல்லி பகுதியை சேர்ந்த அன்வர் மகன் தியகத்அலி எதிர்பாராவிதமாக டூவீலரில் மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சிட்டிபாபு, காரை மடக்கி இடித்துவிட்டு நிற்காமல் செல்கிறாயா என பேசிக்கொண்டிருக்கும் போதே, தியகத்அலி காரிலிருந்து இறங்கி சிட்டி பாவையும், துரையையும் கன்னத்தில் அறைந்துவிட்டு, மீண்டும் காரில் ஏறி சென்றுவிட்டார்.

இதையடுத்து, தியகத்அலி வீட்டு முன்பு, சிட்டி பாபுவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கெங்கவல்லி 3 ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கெங்கவல்லி போலீஸ் எஸ்ஐ முருகேசன் மற்றும் எஸ்எஸ்ஐ கோபால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முறையாக புகாரளித்தால் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறி மறியலை கைவிட செய்தனர். இதனால், கெங்கவல்லி-தெடாவூர் சாலையில் 1.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Relatives ,road ,car accident ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...