×

பொங்கலையொட்டி நாமக்கல்லில் கரும்பு விற்பனை அமோகம்

நாமக்கல், ஜன.13: பொங்கலையொட்டி நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு விற்பனை அமோகமாக நடந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இதையொட்டி, நாமக்கல் உழவர் சந்தை எதிரே உள்ள சாலை, மற்றும் வாரச்சந்தை வளாகத்தில் கொல்லிமலை, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து லாரிகளில் கட்டுக்கட்டாக கரும்பு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஜோடி கரும்பு ₹50 முதல் ₹80 வரை விற்பனையாகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால், இங்குள்ள வியாபாரிகள் உள்ளூர் கரும்பையே அதிகளவில் விற்பனை செய்து வருகிறார்கள்.
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், ஆவரங்காடு மற்றும் அனைத்து கிராம பகுதிகளில், நேற்று மாலை முதலே  காப்புகட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, பள்ளிபாளையம் சந்தை, மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அதிகளவில் கரும்பு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

Tags : Pongaliyoti Namakkal ,
× RELATED சேலத்தில் 103.7 டிகிரி வெயில்