×

திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

திருச்செங்கோடு, ஜன.13: கடந்த தேர்தலில் அதிமுக வசம் இருந்த திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தை, தற்போது திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் திமுக 8, காங்கிரஸ் 1, அதிமுக 5 ஆக இருந்தது. தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சுஜாதா தங்கவேலுவும், அதிமுக சார்பில் 7வது வார்டு உறுப்பினர் சாந்தியும் போட்டியிட்டனர். இதில் சுஜாதா தங்கவேலுவுக்கு 10 வாக்குகள் கிடைத்தன. திமுக கூட்டணிக்கு 9 வாக்குகளே இருந்த நிலையில் சுஜாதாவிற்கு 10 வாக்குகள் கிடைத்ததால், அதிமுக உறுப்பினர் ஒருவர் திமுகவிற்கு வாக்களித்தது தெரியவந்தது.  இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்செங்கோடு ஒன்றியத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஜாதா தங்கவேலுவிற்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்ரமணியம் சான்றிதழ் வழங்கினார். பின்னர், மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்திக்கு, சுஜாதா சால்வை அணிவித்து ஆசி  பெற்றார். பின்பு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். அவருக்கு கொமதேக மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், திமுக நிர்வாகிகளும் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்தினர். துணைத்தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட ராஜவேலு தேர்வு செய்யப்பட்டார்.

Tags : DMK ,president ,union ,Tiruchengode ,
× RELATED இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை...