×

நலஉதவிகள் வழங்கும் விழா

காவேரிப்பட்டணம், ஜன.13: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பெரிய அங்காளம்மன் கோயில் வளாகத்தில் ,கிருஷ்ணகிரி மாவட்ட நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி வேட்டி- சேலை வழங்கும் விழா மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் கென்னடி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோர் சுமார் 60 பேருக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட செயலாளர் மணி, சந்திரன், காந்திராஜ், ஆதவன், சக்தி, சிவா, நவாப், கோவிந்தராஜ், வீரபத்திரன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .முடிவில் நகர செயலாளர் சௌந்தர் நன்றி கூறினார்.

Tags : Welfare Assistance Ceremony ,
× RELATED கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக...