×

திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக கூட்டணியின் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், 10 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக 4 பேரும், அதிமுக ஒருவரும், பாமக 3 பேரும், விசிக ஒருவரும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனர். இதில் திமுகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் மனைவி சுமதி, ஒன்றியக் குழுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் பாமகவை சேர்ந்த பெருமாள் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தேவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஜெயந்தி, மதிமுக வீரமணி, ஜெயபிரகாஷ், இந்திய முஸ்லிம் லீக் நிஜாமுதீன், மனித நேய மக்கள் கட்சி தென்றல், திமுக பொன்.மகேஸ்வரன், ரேணுகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைத்ததை கண்டித்து நாளை (14ம் தேதி) பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. திமுகவினரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : party consultation meeting ,DMK ,office ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...