×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 450 தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, இதுவரை 450 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே, 10ம் வகுப்பு தேர்வை பழைய பாடத்தில் எழுதி, தேர்ச்சி பெறாதவர்கள் வரும் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வினை, பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களில், ஆன்லைன் மூலம், ஜனவரி 6ம் தேதி முதல், 13 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதே மையங்களில், 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பாலக்கோடு, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இம்மையங்களில் பெண்கள் உள்பட தனித்தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை, 450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags : Class 10 General Elections ,
× RELATED தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்...