×

புழல் அருகே காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

புழல், ஜன. 13: புழல் அருகே கதிர்வேடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், துணைத்தலைவர் பர்னபாஸ் தலைமை தாங்கினர். முன்னாள் வார்டு கவுன்சிலர் வதனா பர்னபாஸ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி எம்பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, அப்பகுதியை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகளை பொங்கல் பரிசாக வழங்கினர். இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொது செயலாளர் ராஜன் பர்னபாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கீதா பாபு மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pongal Festival ,Congress ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...