×

மாமல்லபுரம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பொங்கல் விழா கோலப்போட்டி

மாமல்லபுரம், ஜன. 13: மாமல்லபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடந்தது.
மாமல்லபுரத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக மல்லை கலங்கரை விளக்கு மக்கள் சேவை மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 12ம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் கோலப்போட்டி ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது. கோலப்போட்டிக்கு மல்லை கலங்கரை விளக்கு மக்கள் சேவை மைய தலைவரும், விசிக மாநில தொண்டரணி செயலாளருமான மல்லை சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். இந்த கோலப்போட்டியில் மாமல்லபுரத்தில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வண்ண வண்ண கோலமிட்டு அசத்தினர்.

கோலப்போட்டிக்கு தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து 10 சிறந்த கோலத்திற்கு பரிசுகள் வழங்கினர். இதில், முதல் பரிசாக வாஷிங் மெஷின், இரண்டாம் பரிசு பிரிட்ஜ், மூன்றாம் பரிசு வண்ண தொலைக்காட்சி உள்ளிட்ட பரிசுகளும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த கோலப்போட்டியை மல்லை நீர் நிலைகள் சங்க தலைவர் நா.ஜனார்த்தனம், திமுக மாவட்ட துணை செயலாளர் மல்லை
வெ.விசுவநாதன், மாமல்லா அனெக்ஸ் உரிமையாளர் ஜெ.சேதுராமன், மல்லை நீர் நிலைகள் சங்க ஆலோசகர் தி.கிருஷ்ணராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வா.கனல்விழி மற்றும் மாமல்லபுரம் நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pongal Festival ,Mamallapuram Liberation Panthers ,
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா