×

காஞ்சி சங்கரா பல்கலையில் சமத்துவ பொங்கல் விழா

காஞ்சிபுரம், ஜன. 13 : காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி. இராகவன், பதிவாளர் ஜி.ஸ்ரீனிவாசு மற்றும் நிதி அதிகாரி இராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தனர். இதில் டீன்(அறிவியல்) பாலாஜி, நிர்மல்ராஜ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் அடுப்பு மூட்டி கரும்பு, பழம், பொங்கல் படைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், கயிறு இழுத்தல், உரியடி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டி ஆகியன சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Equality Pongal Festival ,Kanchi Sankara University ,
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா