×

காளையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்வு

காளையார்கோவில், ஜன.13:  காளையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். காளையார்கோவில் ஒன்றியத்தில் 43 பஞ்சாயத்தில் 19  ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்தது.  9 இடங்களில் அதிமுகவும், 8 திமுகவும், 2 சுயேச்சையும், 19 ஒன்றிய குழு உறுப்பினர்களும். வெற்றி பெற்றனர். நேற்று முன்தினம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் 17வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி  ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் பிஎஸ்சி கணித அறிவியல் படித்துள்ளார். இரண்டு குழுந்தைகள் உள்ளனர்.கணவர் விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். ஒன்றியகுழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 10வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் மேப்பல் கிராமத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ராஜா 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Tags : Vice President ,Union Committee ,
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...