×

மாநில ஹாக்கி போட்டியில் அழகப்பா பள்ளி அசத்தல்

காரைக்குடி, ஜன.13:  காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி ஹாக்கி வீரர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை வாடிப்பட்டியில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் ஹாக்கி பிரிவில் 32 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி ஹாக்கி அணி வீரர்கள் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை அழகப்பா கல்விக்குழும செயலாளர் உமையாள் ராமநாதன், தலைவர் ராமநாதன் வைரவன், பள்ளி முதல்வர் குமரன்கணேசன், உடற்கல்வி ஆசிரியர் ஹரிபிரசாத் மாயழகு ஆகியோர் பாராட்டினர்.

Tags : Alagappa ,school ,state hockey tournament ,
× RELATED அழகப்பா பல்கலை., மாணவர்கள் உருவாக்கம்...