×

மானாமதுரையில் இன்று மின்தடை

மானாமதுரை, ஜன.13: மானாமதுரை வட்டார பகுதிகளில் மின்பராமரிப்பு பணி நடக்கவிருப்பதால் இன்று மின்விநியோகம் இருக்காது என மானாமதுரை துணை மின்நிலைய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மானாமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மானாமதுரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று(ஜன.13) நடைபெற இருப்பதால்  மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...