×

தினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் பொங்கல் விழா

தொண்டி, ஜன.13: தினைக்காத்தான்வயல் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் சமத்துவபொங்கல் விழா மற்றும் மாணவர்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. தொண்டி அருகே தினைக்காத்தான்வயல் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியில் சமத்துவபொங்கல் விழா, தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமையில், தலைமை ஆசிரியை லதா முன்னிலையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர்கள் மகமாயி, வனஜா, அமுதா, நாக கன்னி, சுரேஷ்கண்ணன், ராமராஜன் ஏற்பாடு செய்தனர். மாணவர்களுககு கோலப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போகி பண்டிகையை புகையில்லாமல் காற்றை மாசுபடுத்தாமல் கொண்டாட வேண்டும் என்று ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார். சத்துணவு அமைப்பாளர், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : ceremony ,Thinnakkatanvayal Government School ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா