×

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

கமுதி, ஜன.13: கமுதி ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியதால், கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் 19 உறுப்பினர்களில் திமுக 7 இடங்களையும், அதிமுக 7 இடங்களையும், தேமுதிக, பாஜக தலா 1 இடத்தையும், சுயேட்சை உறுப்பினர்கள் 3 இடத்தையும் கைப்பற்றினர். இதில் திமுக சார்பில் தமிழ்செல்வி போஸ், அதிமுக சார்பில்முத்துப்பாண்டியம்மாள் காளிமுத்தும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முத்துப்பாண்டியம்மாள் 8 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஒருவரின் வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 10வது வார்டு சுயேட்சை உறுப்பினர் சித்ராதேவி அய்யனார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்செல்வி, துணைத் தலைவர் சித்ராதேவி ஆகியோருக்கு ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், யூனியன் ஆணையாளர்கள் ரவி, ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், கூட்டணி கட்சியினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags : DMK ,Kamuthi Panchayat Union ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...