×

தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு கூடாரை வெல்லும் கூத்தன் அலங்காரம் துறையூர் அருகே நாகநல்லூரில் வீட்டில் திருடு போன 25 பவுன் நகைகள், ரூ.31.40 லட்சம் மீட்பு

துறையூர், ஜன.13: துறையூர் அருகே நாகநல்லூரில் பூட்டிய வீட்டை திறந்து திருடப்பட்ட 25 பவுன் நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் நேற்று மீட்டனர். துறையூர் அருகே நாகநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தராஜ் மனைவி சுசீலா(53). இவர் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் தாக்குதலால் கடந்த டிச.26ம் தேதி திருச்சி மருத்துவமனைக்கு சென்றார். அதன் பின்னர் ரங்கத்தில் உள்ள தனது மகன் வெங்கடேசின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கடன் தீர்த்தது போக மீதி ரூ.31,40,000 ரொக்க பணமும், 25 பவுன் நகைகளையும் வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் அவருடைய வீட்டுப் பூட்டை சேதப்படுத்தாமல் திறந்து வீட்டுக்குள் இரும்பு அலமாரியில் சுசீலா வைத்திருந்த தங்க நகைகளையும், ரொக்கப்பணம் முழுவதும் திருடு போனது.

சுசீலா சிகிச்சைக்கு கிளம்புவதற்கு முன்பு தனது வீட்டருகே வசித்துக்கொண்டு தன்னைக் கவனித்துக் கொண்ட கோவிந்தராஜ் மனைவி கீதா(36) என்பவரிடம் சாவியை கொடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருட்டு நடந்த சமயத்தில் கீதா அதே ஊரில் காட்டுக்கொட்டைகையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்ததாக கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கீதா காட்டுக்கொட்டகையில் உள்ள தனது வீட்டின் பின்புறம் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை புதைத்து வைத்துள்ளதாக கூறி திருட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உப்பிலியபுரம் போலீசார் புதைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள், ரூ.31.40 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : jewelery ,home ,Thuraiyur ,Naganallur ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...