×

வேளாண் துறையில் நேரடி நியமனம் செய்யப்பட்ட 104 உதவி பொறியாளர்களுக்கு மூதுரிமையை 1998ம் ஆண்டை வைத்து வழங்கக் கூடாது

திருச்சி, ஜன.13: வேளாண் மை துறையில் நேரடி நியமனம் செய்யப்பட்ட 104 உதவி பொறியாளர்களுக்கு மூதுரிமையை பணி நியமனம் செய்யப்பட்ட 1998ம் ஆண்டு முதல் வழங்கக் கூடாது என வேளாண்மை பொறியாளர் சங்க தலைவர் சிவசண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சிவசண்முகம் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வேளாண்மை பொறியியல் துறையில் உதவி பொறியாளர் பணியிடம் தமிழ்நாடு தேர்வாணைய குழு வாயிலாக நிரப்பப்பட வேண்டும். 1998ல் 104 தற்காலிக உதவி பொறியாளர்களை முந்தைய அரசு தற்காலிகமாக நியமனம் செய்தது. தொடர்ந்து தேர்வாணைய குழு மேற்படி தற்காலிக நிலையில் பணிபுரிந்து வந்த 104 உதவி பொறியாளர்களை பணி நீக்கம் செய்திட வலியுறுத்தி வந்தது. ஆனால் கடந்த 2012ம் ஆண்டுதான் தேர்வாணைக்குழு வைக்கும் தேர்வு இல்லாமலே தேர்வாணைக்குழுவிடம் ஒப்புதல் பெற்று அரசு மேற்கண்ட 104 தற்காலிக உதவி பொறியாளர்களை பணிவரன் முறை செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு வேளா ண்மை பொறியியல் பணி விதிகளின்படி நேரடி நியமனம் பெறும் உதவி பொறியாளர்களுக்கு பணிவரன்முறை பிறப்பிக்கப்பட்ட ஆண்டு தான் அவர்களின் மூதுரிமைக்கு கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி 104 பேருக்கு 2012ல் நிர்ணம் செய்யப்பட வேண்டும். இந்த விதியை மீறி வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன் 104 பேரின் மூதுரிமையயில் தற்காலிக பணியேற்ற ஆண்டான 1998லிருந்து மூதுரிமை நிர்ணயம் செய்திட அரசுக்கு கருத்துரை அனுப்பியுள்ளார்.

இதை நிராகரிக்க, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் மற்றும் வேளாண் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். இதை மறுத்து 104 பொறியாளர்களுக்கு மூதுரிமை நிர்யணம் செய்திட அரசிடம் தெளிவுரை கடிதம் அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனால் 1998 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 60 உதவி பொறியாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே தற்போதைய விதிகளின்படி, 104 பேருக்கு 2012 முதல் மூதுரிமையை வைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 20 முதல் 24 வரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Senior Assistant Engineers ,field ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது