×

வேளாண் பொறியாளர் சங்கத் தலைவர் பேட்டி தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் கைவினைஞர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, ஜன.13: திருச்சியில் நடந்து ஆண்டு கூட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு கைவினைஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் தமிழ்நாடு கைவினைஞர், கட்டுமானம் மற்றும் உடல் உழைப்போர் நலச்சங்கம் சார்பில் 19ம் ஆண்டு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் பிலவேந்திரன், பொருளாளர் வனராஜ், சட்ட ஆலோசகர் மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக நிதி உதவியை ரூ.5000 முதல் 15,000 வரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை மரண நிதியை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்வு காரணமாக ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வேண்டும். மழை, வெயில் மற்றும் கடும் உழைப்பினால் உழைக்கும் திறன் தொழிலாளிக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதால் ஓய்வூதிய வயது 60 என்பதை 55 ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர், அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்திற்கு புதிய வாரிய நிர்வாகக்குழு நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : President ,Agricultural Engineers Association ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...