×

மன்னார்குடி - பெங்களூரூ இடையே புதிய ரயில் இயக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

நீடாமங்கலம் - மன்னார்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதையில் 1977ம் ஆண்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1987ம் ஆண்டு இருந்த மீட்டர் கேஜ் தண்டவா ளங்களை பிரித்து எடுத்து ஏலம் விடப்பட்டது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த சூழலில் மன்னார்குடிக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் சாத்தியமில்லை என மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கருதி வந்தனர். இந்த சூழலில் 2009-10 நிதியாண்டு, திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும், ரயில்வே நிலைக்குழு தலைவராகவும் பணியாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர்.பாலு மீண்டும் ரயில் பாதை அமைக்க தொடர் முயற்சி மேற்கொண்டார். அதன் பலனாக 41 கி.மீ மன்னார்குடி- பட்டுக்கோட்டை புதிய பாதை திட்டத்தை ரயில்வே அமைச்சராக அப்போது இருந்த மம்தா பானர்ஜி 2010 ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்ததோடு அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கினார்.

13 கி.மீ நீள மன்னார்குடி - நீடாமங்கலம் பாதை ரூ.79 கோடி செலவில் உருவாக்கப்பட்டு செப்டம்பர் 2011 முதல் ரயில்கள் போக்குவரத்து துவங்கியது. மன்னார்குடி பட்டுக்கோட்டை இடையே 2012 ஆண்டு விரிவான சர்வேயும் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப் பட்டு வந்தது. கடந்த ஆண்டு திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி இத்திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் துவங்கி விட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதன் பிறகும் ரயில்வே விரிவக்க பணிகள் எதுவும் மன்னார்குடி பகுதியில் நடக்கவில்லை என்பதே உண்மை.தற்போது சரக்கு போக்குவரத்து மன்னார்குடி ரயில் நிலையத்தில் விரைவில் துவங்க இருக்கிறது. மேலும் மன்னார்குடி - நீடாமங்கலம் ரயில் பாதையை மின்சாரப் பாதையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் தந்துள்ளது.

இதுக்குறித்து மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா கூறுகையில், உர மூட்டைகள் இறக்கி டெல்டா மாவட்டங்களுக்கு விநியோகிக்க கடந்த 2018ம் ஆண்டு பாமணி உரத் தொழிற்சாலை மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி கோரியது. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ரயில்வே நிர்வாகத்தின் அனைத்து மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றதோடு தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தினேன்.
அதனை ஏற்று சரக்கு போக்குவரத்து விரைவில் துவங்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் உறுதியளித்ததோடு பாமணி ரோடு ரயில்வே கேட்டை ஒட்டி நரிக்குறவர் காலனி அருகே செல்லும் கான்கிரீட் சாலை திருவாரூர் ரோடு ஐவர் சமாதி வரை நீட்டிக்கும் பணி, மற்றும் தற்போதுள்ள ரயில்வே ரோடுகள் அனைத்தையும் ஐவர் சமாதி வரை நீட்டிக்கும் பணியையும் தற்போது மேற்கொண்டு வருகிறது. வரும் 2020-21 நிதியாண்டு முதல் சரக்கு போக்குவ ரத்து துவங்க உள்ளது.

அதுபோல் நீடாமங்கலத்தில் போக்குவரத்துக்கு மிக பெரிய பிரச்சனையாக உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2013, 2014 ஆம் ஆண்டு ஆஃபத்ய ரயில்வே நிலைக்குழு தலைவர் டிஆர்.பாலு இந்த திட்டத்திற்கு அனுமதியும் நிதியையும் பெற்று தந்தார். அடுத்த சில நாட்களில் நீடாமங் கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார். ஆனால் இன்று வரை அப்பணிகள் துவக்கப் படவில்லை. இதனை வலியுறுத்தி கடந்தாண்டு மார்ச் மாதம் மத்திய ரயில்வே அமைச்சரை டெல்லியில் திமுக எம்பி கனிமொழியுடன் சேர்ந்து நான் சந்தித்து பாலத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளேன்.

ரயில்வே தற்போது மேற்கொண்டு வரும் திருச்சி - காரைக்கால் மின்மயம் திட்டத்தில் மன்னார்குடி- நீடாமங்கலம் பகுதி விடுப்பட்டு உள்ளது. மின்சார என்ஜின்கள் கொண்டு சரக்கு ரயில்கள் விரைவாக கையாளவும், நீடாமங் கலத்தில் இருந்து - மன்னார்குடி ரயில்கள் இயக்க தனியாக டீசல் மாற்று என்ஜின் தேவைப்படும் என்று நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்த சூழலில் எங்களின் தொடர் முயற்சியால் மன்னார்குடி -நீடாமங் கலம் மின்மயம் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் தந்து உள்ளது. வரும் 2020-21 நிதியாண்டு இந்த பணிகள் துவங்க உள்ளது. திமுக சார்பில் எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருது கிறேன் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா கூறினார்.

இதுகுறித்து மன்னை வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் ஆர்வி ஆனந்த் கூறுகையில்: மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் கொள்முதல் ஆகும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நீடாமங்கலம் கொண்டு சென்று சரக்கு வேகன்களில் தற்போது ஏற்றப்படுகிறது. நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடக்கும் போக்குவரத்து நெருக்கடி தினசரி ஏற்படுகிறது. இதனால் லாரிகளில் கொண்டு சென்று மூட்டைகளை குறித்த நேரத்தில் சரக்கு ரயில்களில் ஏற்ற இயலாமல் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்ரேஷன் அபராத கட்டணம் ரயில்வேக்கு அவ்வப்போது செலுத்தி வருகிறது. இதற்கு தீர்வாக இந்நிறுவனமும் மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்குகள் போக்குவரத்து துவங்கும் நாளை எதிர்பார்த்து இருக்கிறது. ரயில்வே சரக்கு போக்குவரத்து மன்னார்குடியில் துவங்குவது நகர வளர்ச்சிக்கும், வர்த்தக மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என கூறினார்.

இதுகுறித்து ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க தலைவர் ஹரேஷ் கூறுகையில், சரக்கு போக்குவரத்து துவங்குவது பாரம்பரியம் மிக்க மன்னார்குடி நகரத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் மன்னார்குடி - பெங்களூரூ இடையே புதிய ரயிலை வரும் பட்ஜெட் அறிவிக்க வேண்டும். ரயில் நிலையம் அருகில் பாழடைந்த நிலையில் உள்ள பழைய குடோன், டாஸ்மார்க் கடை அமைந்துள்ள பகுதிகளை பயன்டுத்தி மன்னார்குடி ரயில்வே யார்டில் கூடுதல் ரோடு அமைத்து விரிவுப்படுத்த வேண்டும் என்றார். 104 பேருக்கு 2012 முதல் மூதுரிமையை வைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 20 முதல் 24 வரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும்.

Tags : Bangalore ,Mannargudi ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை