×

வர்த்தகர்கள் சங்கம் எதிர்பார்ப்பு லால்குடி, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

லால்குடி, ஜன.13: லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் ரவிச்சந்திரன், ரஷ்யா ஆகியோர் வெற்றி பெற்றனர். லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஒன்றியகுழு தலைவர் தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட மன்ற வளாகத்தில் நடைபெற்றது. லால்குடியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் உறுப்பினர்கள் முத்துலெட்சுமி, ஜீவா, தேவராஜ், இளங்கோவன், ரேணுகா, செல்வராஜ், பிச்சைமணி, சோபனா, முத்துச்செழியன், பாலாஜி, பரமேஸ்வரி, அம்பிகபவதி, இசைவாணி, சின்னதுரை, ரவிச்சந்திரன், குணசீலன, மேரிகிறிஸ்டினாள், பிரியா, பஞ்சவர்ணம், நிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒன்றிய குழு தலைவருக்கு திமுக சார்பில் ரவிச்சந்திரன், அதிமுக சார்பில் இசைவாணி போட்டியிட்டனர். இதில் ரவிச்சந்திரன் திமுக ஒன்றிய குழு தலைவராகவும், முத்துச்செழியன் ஒன்றிய குழு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அறிவித்தனர்.

மேலும் புள்ளம்பாடி ஊராட்சியில் ஓன்றிய கவுன்சிலர்கள் கண்ணன், ரஷ்யா, ஜெயபிரகாசம், சுதா குணவதி, வடிவேல், வெற்றிச்செல்வி, ஜெயந்தி, ரவிச்சந்திரன், சந்திரா, கனகராஜ், ஜெனிபர், ஜெனிவா ,செல்வமேரி, சோபனா, கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர். ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் திமுக ஒன்றிய குழு தலைவராக தேர்தெடுத்தனர். கனகராஜ், ஒன்றிய குழு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணை தலைவர், உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கே.என்.நேரு, தியாகராஜன், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : win ,DMK ,Poompumatti ,Lalgudi ,panchayat union committee chairman election ,
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்