கலெக்டர் வழங்கினர் திருத்துறைப்பூண்டி வட்ட அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.13: திருத்துறைப்பூண்டி வட்டஅரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டத் துணைத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ், இணைச் செயலாளர் மணிவண்ணன் வருவாய்த்துறை அலுவலர் சங்க ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் புதிய வட்டக்கிளை நிர்வாகிகன் தேர்வு நடைபெற்றது. தலைவராக ஊரக வளர்ச்சித்துறை பன்னீர்செல்வம், செயலாளராக மருத்துவத்துறை செந்தில்நாதன், பொருளாளராக வருவாய்த்துறை பாண்டியன், துணைத்தலைவராக நீதித்துறை மதியழகன், நெடுஞ்சாலைத்துறை மணிகண்டன், வருவாய்த் துறை தமிழ்ச்செல்வி, இணைச் செயலாளராக விஏஓ தருமையன், செயற்குழு உறுப்பினர்களாக ஊரகவளர்ச்சித் துறை கீர்த்திவாசன், வருவாய்த் துறை ரவிச்சந்திரன், ஊரகவளர்ச்சித் துறை தமிழ்ச்சுடர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Collector ,Executive Committee Meeting of the Circular Government Employees Union ,Tirupur ,
× RELATED தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த...