×

வர்த்தகர்கள் சங்கம் எதிர்பார்ப்பு திருவாரூரில் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு

திருவாரூர், ஜன. 13: திருவாரூர் மாவட்ட எஸ்பி டாக்டர் துரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் நேரடி காவல் உதவி ஆய்வாளர் - 2019 தேர்வு அறிவித்திருந்த நிலையில் அதற்கான எழுத்து தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. பொது தேர்வர்களுக்கு நேற்றும், காவல் துறையைச் சேர்ந்த தேர்வாளர் களுக்கு இன்றும் (13ம் தேதி) தேர்வுகள் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திரு.வி.க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வுகள் நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற தேர்வில் 1311 பொது தேர்வர்களும், இன்று நடைபெற வுள்ள தேர்வில் 171 காவல்துறையை சேர்ந்த தேர்வர்களும் எழுதுகின்றனர். திருவாரூர் மாவட்ட, எழுத்துத் தேர்வை சிறப்பு தணிக்கை செய்ய தமிழ்நாடு போலிஸ் அகாடமி, காவல் துறை தலைவர் மகேந்திர குமார் ரத்தோட் நியமிக்கப் பட்டுள்ளார். தேர்வர்கள் எவ்வித இடையூறுமின்றி எழுத்து தேர்வை எழுத மாவட்ட எஸ்பி நேரடி பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

இப்பணியில் தேர்வு மைய உள்புறம், தேர்வு அறை மற்றும் வெளிப்புற பாதுகாப்பு பணிகளில் 150 காவல் அலுவலர்கள் (துணைக் காவல் கண் காணிப்பாளர் மற்றும் காவலர்கள்) மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல காவல் வாகனம் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.பொது தேர்வர்களுக்கு காலை 10 மணி முதல்12.30 மணி வரையிலும், காவல்துறையில் சேர்ந்த தேர்வர்களுக்கு காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்கு வரும் போது செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப் பட்டுள்ளதாகவும். தேர்வு எழுத பால்பாயிண்ட் (நீலம்,கருப்பு) பேனா மட்டும் அனுமதிக்கப் படும் எனவும். மீறி செல்போன் போன்ற தடை விதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு வரும் தேர்வாளர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் எஸ்பி துரை குறிப்பிட்டுள்ளார்.

Tags : Merchants Association ,Expectation Analyst Writing Exam ,Tiruvarur ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...