×

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் துணை தலைவர் தேர்வில் இழுபறி


வலங்கைமான், ஜன.13: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்டக்குழு, 15 ஒன்றியக்குழு, ஐம்பது கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 342 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. அதில் இரண்டு ஊராட்சி தலைவர்கள் மற்றும் 78 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானர்கள். மொத்தம் உள்ள 408 பதவிகளில் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்ட 80 பதவிகள் நீங்கலாக உள்ள 328 பதவிகளுக்கு கடந்த 30 தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் ஆயிரத்து 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளான கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. பின்னர் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அதற்கான சான்றுகள் தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக ஊராக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சி மற்றும் சுயேட்சை ஆதரவோடு அதிமுகவை சேர்ந்த சங்கர் ஒன்பது வாக்குகள் பெற்று ஒன்றியக்குழு தலைவராக வெற்றிபெற்றார். பின்னர் மாலை நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலில் 10 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுகவை சேர்ந்த வாசுதேவன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஐம்பது கிராம ஊராட்சிகளில் நேற்று முன்தினம் காலை கிராம ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற்றது. பொதுவாக கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்தெடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை ஒன்றியக்குழு வைப்போன்று கிராம ஊராட்சிமன்ற துணைத்தலைவருக்கும் தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து மொத்தம் உள்ள ஐம்பது ஊராட்சிகளில் 37 கிராம ஊராட்சிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான வாக்குபெட்டி உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சில ஊராட்சிகளில் முன்னேற்பாடுகளாக அனுப்பி வைக்கப்ட்டனர்.

சில ஊராட்சிகளில் மட்டுமே போட்டியின்றி ஒருமணதாக துணைத்தலைவர் தேர்தெடுக்கப்பட்டனர். 83 ரெகுநாதபுரம், சித்தன்வாழுர், களத்தூர், முனியூர் உள்ளிட்ட நான்கு கிராம ஊராட்சிகளில் போதிய உறுப்பினர் வராததால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. இதன் மூலம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் திருவிழா முடிவுக்கு வரவில்லை.

Tags : Valangaiman ,deputy chairman ,election ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...