×

தழைச்சத்து உரங்கள் அதிகம் இடுவதை தவிர்க்க வேண்டும்

மன்னார்குடி, ஜன.13: திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே செட்டிசத்திரம், சோனாபேட்டை மற் றும் முன்னாவல் கோட்டை கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம சுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் மற்றும் நீடா வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேவேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்த பின்பு புகையான் பூச்சியின் தாக்குதல் ஒருசில இடங்களில் காணப்படுவதாகத் தெரிவித்தனர்.

ஆய்வுக்குறித்து பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறுகை யில், தழைச்சத்து உரங்களை குறிப்பாக யூரியாவை நெற் பயிரு க்குத் தேவைப்படும் அளவைவிட அதிக அளவில் இடுவது, நன்கு சமன் படுத்தாத வயல்களில் பள்ளப்பகுதிகளில் தண்ணீர் தொடர்ந்து அதிக அளவில் தேங்கியிருப்பது மற்றும் குறுகிய இடைவெளியில் நடவு செய்த வயல்கள் அதாவது மிகவும் நெருக்கமாக நடவு செய்யப்பட்ட வயல்களில் போதுமான சூரிய வெளிச்சமானது தூர்களில் படாமல் போவதாலும், அந்தப் பகுதிகளில் போதிய காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் புகையான் பூச்சியின் தாக்குதல் காணப்படும். புகையான் பூச்சியின் தாக்குதலால் 10 முதல் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

புகையான் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் : புகையான் பூச்சியின் இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் அதிக அளவில் கூட்டங்கூட்டமாக தூர்களின் அடிப்பகுதியிலுள்ள தண்டிலிருந்து சாற்றினை உறிஞ்சுவதால் ஊட்டச்சத்துக்கள் பயிரின் மற்ற பகுதிகளுக்கு செல்வது தடைபடும். அதனால் நெற்பயிர் முழுவதும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறி பின்பு காய்ந்து விடும்.

தாக்குதல் அதிகமாகக் காணப்பட்டால் தண்டுப் பகுதியானது செயலிழந்து, வலுவிழந்து ஒடிந்து சிறிது காற்றடித்தால்கூட நெற்பயிரானது சாய்ந்துவிடும். மேலும் தாக்குதலுக்குள்ளான தண்டுப் பகுதியிலிருந்து துற்நாற்றம் வீசும். இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது வயல்களில் அரை வட்ட வடிவமாக பயிர் புகைந்தது போன்று ஆங்காங்கே திட்டுதிட்டாகக் காணப் படும். எனவே இப்பூச்சிக்கு புகையான் எனப் பெயர் வந்தது.

கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்திற்கு முன்பே காய்ந்து விடுவதால் மணிகள் உருவாவதும் தடைப்படும் அல்லது உருவாகும் கதிர் பதராகி விடும். இதன் தாக்குதல் பயிரின் ஆரம்ப நிலை முதல் அறுவடை வரை காணப்படும். இந்த புகையான் ப10ச்சியானது நெற்பயிரில் புல் குட்டை, வாடல் குட்டை மற்றும் கிழிந்த குட்டை ஆகிய நச்சுயிரி நோய்களைப் பரப்பும் ஆற்றல் வாய்ந்தது. ஒரு தூருக்கு ஒரு பூச்சி காணப்படுதல் அல்லது ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி காணப்படும் இடங்களில் தூருக்கு இரண்டு பூச்சிகள் காணப்பட்டால் அது பொருளாதார சேத நிலையை ஏற்படுத்தும்.

புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் : வயலில் தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக சமன் படுத்து தல் வேண்டும். விளக்குப் பொறிகளை இரவு நேரங்களிலும், மஞ்சள் வண்ணப்பொறிகளை பகல் நேரங்களிலும் பயன் படுத்தி வளர்ந்த பூச்சிகளை கண்காணிக்கவும், கவர்ந்து அழிக்கவும் பயன் படுத்த வேண்டும். வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டு, தரைநீள்வண்டு, கண்ணாடி இறக்கைப் பூச்சி, தொழு வெட்டுக்கிளி மற்றும் சிலந்தி போன்றவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

இதன் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்ட உடனே வயலில் தேங்கியுள்ள தண்ணீரை சுத்தமாக வடித்து விடவேண்டும். மேலும் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது 3 - 4 நாட்கள் வயலில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தழைச்சத்து உரங்கள அளவுக்கு அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும். தாக்குதலுக்குண்டான பயிர்களைப் பட்டம் பிரித்து வயலின் மற்ற பகுதி களுக்கு புகையான் பூச்சி பரவாமல் தடுக்க வேண்டும். நெற்பயிர் பூப்பதற்கு முன்பாக 5 சத வேப்பங்கொட்டைக் கரைசல தேவையான அளவு ஒட்டும் திரவம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

வேப்பெண்ணெய் மருந்தான அசடிராக்டின் 0.03 சத மருந்தினை ஒரு ஏக்கரு க்கு 400 மிலி என்ற அளவில் தேவை யான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்துக் கட்டுப் படுத்தலாம். புகையான் பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிiயைத் தாண்டினால் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான இமிடா குளோர்பிட் 17.8 எஸ்.எல் - 40 மிலி அல்லது தயாமீதாக்ஸாம் 25 டபிள்ய10.ஜி. - 40 கிராம் அல்லது பிப்ரோனில் 5 எஸ்.சி.-500 கிராம் அல்லது பிபூப்ரொபேசின் 350 மிலி இவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் பயன்படுத்தி தூர்களின் அடிப் பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும்.

விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது : எக்காரணம் கொண்டும் இரண்டு வகையான மருந்துகளை ஒன்றாகக் கலந்து தெளிக்கக்கூடாது. புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மறு உற்பத்தித் திறனை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளான செயற்கை பைரித்தி ராய்டு மருந்துகளான சைபர் மெத்ரின், லாம்டாசை குளோத்ரின், டெல்டா மெத்ரின் மற்றும் மீதையல் பாரத்தியான், குயினல்பாஸ் போன்ற மருந்து களைப் பயன் படுத்துவதைக் கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும். இவ்வாறு ராஜா ரமேஷ் கூறினார். ஆய்வின் போது நீடா வட்டார வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன் உடனிருந்தார்.

Tags :
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...