×

விற்பனை மும்முரம் பெருமாண்டி இடுகாட்டில் கழிவு குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை செய்யக்கூடாது

கும்பகோணம், ஜன. 13: கும்பகோணம் பெருமாண்டி இடுகாட்டில் கழிவு குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை செய்யக்கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை கலெக்டருக்கு விஷ்வ இந்து பரிஷத் நகர தலைவர் கண்ணன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் கும்பகோணம் அடுத்த பெருமாண்டி இடுகாடு பல ஆண்டுகளாக காவிரி ஆற்றின் கரையோரத்தில் இருக்கிறது. இதனால் இங்கு அடக்கம் செய்வதால் மோட்சம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

இந்நிலையில் ஒன்றரை ஏக்கரில் உள்ள பெருமாண்டி இடுகாட்டில் நகராட்சி சார்பில் கழிவு குப்பைகளை கொண்டு உரம் தயாரிப்பதற்காக கட்டிடம் கட்டும் பணி துவங்கவுள்ளது. இதனால் இடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இட பற்றாகுறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் இடுகாட்டில் பெரிய கட்டிடத்தை கட்டினால் வருங்காலத்தில் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தற்போது இடுகாட்டில் கட்டிடம் கட்டும் பணி துவங்க இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி பெருமாண்டி இடுகாட்டுக்குள் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Salem Perumundi Graveyard ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்